< Back
மாநில செய்திகள்
சரக்கு வாகனம் சாலையில் கவிழ்ந்தது
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

சரக்கு வாகனம் சாலையில் கவிழ்ந்தது

தினத்தந்தி
|
17 Feb 2023 1:00 AM IST

தேன்கனிக்கோடடை:-

தேன்கனிக்கோட்டையில் சாமந்தி பூக்கள் ஏற்றி சென்ற சரக்கு வாகனம் சாலையில் கவிழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சரக்கு வாகனம்

தேன்கனிக்கோட்டை, தளி பகுதியில் 100-க்கும் மேற்பட்ட ஏக்கரில் சாமந்தி பூக்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. இங்கு சாகுபடி செய்யப்படும் பூக்கள் தினமும் சரக்கு வாகனத்தில் ஏற்றி சென்னை, திருச்சி, சேலம் உள்ளிட்ட இடங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

நேற்று முன்தினம் இரவு தேன்கனிக்கோட்டை பகுதியில் இருந்து சாமந்தி பூக்களை எற்றிக் கொண்டு சரக்கு வாகனம் ஒன்று கெலமங்கலம் சாலையில் சென்றது.

சாலையில் கவிழ்ந்தது

கலகோய்சுந்திரம் கிராமம் அருகில் சரக்கு வாகனம் சென்ற போது எதிரே வந்த மற்றொரு வாகனம் மீது மோதியது. இதில் சரக்கு வாகனம் சாலையில் கவிழ்ந்து பூக்கள் ஆங்காங்கே சிதறின. சரக்கு வாகனமும் அப்பளம் போல் நொறுங்கின. தகவல் அறிந்த தேன்கனிக்கோட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

இந்த விபத்தில் சரக்கு வாகனம் மற்றும் எதிரே வந்த வாகனம் ஆகிய 2 டிரைவர்கள் காயம் அடைந்தனர். இருவரையும் போலீசார் மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

மேலும் செய்திகள்