< Back
மாநில செய்திகள்
திருச்சி
மாநில செய்திகள்
விபத்தில் சிக்கிய சரக்கு வேன்
|14 Jan 2023 10:50 PM IST
சரக்குவேன் விபத்தில் சிக்கியது
திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் இருந்து திருச்சி மாவட்டம் துறையூர் வழியாக உப்பிலியபுரம் நோக்கி நேற்று அதிகாலை கோழிகளை ஏற்றிச்செல்ல சரக்கு வேன் சென்று கொண்டிருந்தது. சரக்கு வேனை கோபிச்செட்டிப்பாளையத்தை அடுத்த கோட்டுப்பிள்ளையார்பாளையத்தை சேர்ந்த சதீஸ்குமார்(வயது 30) என்பவர் ஓட்டிச்சென்றார். புடலாத்தி பிரிவு சாலை அருகே வேன் சென்று கொண்டு இருந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மரத்தில் சாய்ந்து நின்றது. இதில் சதீஸ்குமார் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.