< Back
மாநில செய்திகள்
சென்னை வேப்பேரியில் சரக்கு வேன் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
சென்னை
மாநில செய்திகள்

சென்னை வேப்பேரியில் சரக்கு வேன் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

தினத்தந்தி
|
8 Nov 2022 1:42 PM IST

சென்னை வேப்பேரியில் சரக்கு வேன் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்தவர் தமீம் (வயது 40). இவர் தனியார் நிறுவனத்தில் சரக்கு வேன் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவர், நேற்று மதியம் வேப்பேரி பெரியார் திடலுக்கு சரக்கு வேனில் வந்திருந்தார். வேனை நிறுத்திவிட்டு கிழே இறங்கிய தமீம், அருகில் உள்ள ஓட்டலுக்கு செல்ல முயன்றார். அப்போது திடீரென, சரக்கு வேனில் இருந்து புகை வந்தது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த தமீம், சரக்கு வேனை விட்டு தள்ளி நின்றார். இதற்கிடையில் புகை அதிகமாகி, சரக்கு வேன் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. அங்கிருந்த ஊழியர்கள், அருகில் இருந்து தண்ணீர் மற்றும் தீ தடுப்பு கருவி போன்றவற்றை பயன்படுத்தி தீயை அணைக்க முயன்றனர்.

குபுகுபு வென பற்றி எரிந்த தீயால், சரக்கு வேன் தானாக முன்னோக்கி நகர்ந்து சென்றது. இது அங்கிருந்தவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. தகவலின் பேரில் விரைந்து வந்த வேப்பேரி தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை முழுவதுமாக அணைத்தனர். வாகனத்தில் உள்ள பேட்டரியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீப்பிடித்து எரிந்து இருக்கலாம் என தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்