< Back
மாநில செய்திகள்
சிவகங்கை
மாநில செய்திகள்
டயர் வெடித்து கவிழ்ந்த கார்
|6 July 2023 12:15 AM IST
டயர் வெடித்து கார் கவிழ்ந்தது
எஸ்.புதூர்
எஸ்.புதூர் கிராமத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் மனைவி சுசிலா(வயது 47). இவர் தனது மகன்கள் விஜய், சங்கர் மற்றும் உறவினர்களுடன் பொன்னமராவதியிலிருந்து எஸ்.புதூருக்கு காரில் வந்து கொண்டிருந்தார். உலகம்பட்டி அருகே வந்தபோது திடீரென காரின் முன்பக்க டயர் வெடித்தது. மேலும் கட்டுப்பாட்டை இழந்த கார் புழுதிபட்டி-பொன்னமராவதி நெடுஞ்சாலையில் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பயணித்த சுசிலா, விஜய், சங்கர், சந்தோஷ் ஆகியோர் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.