< Back
மாநில செய்திகள்
3 பெண்களை தூக்கி வீசி ஓட்டலை துவம்சம் செய்த கார் - நாமக்கல்லில் பயங்கரம்..!
மாநில செய்திகள்

3 பெண்களை தூக்கி வீசி ஓட்டலை துவம்சம் செய்த கார் - நாமக்கல்லில் பயங்கரம்..!

தினத்தந்தி
|
16 Sept 2023 4:08 PM IST

நாமக்கல்லில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி தனியார் ஓட்டலுக்குள் புகுந்தது.

நாமக்கல்,

நாமக்கல்லின் திருச்செங்கோட்டில் இருந்து குமாரபாளையத்திற்கு சஞ்சய் என்பவர் தனது சகோதரர் கஸ்தூரி ரங்கன் மற்றும் சகோதரியுடன் காரில் சென்று கொண்டிருந்தார்.இவர்கள் ஒட்டமேசை பகுதி வழியாக குமாரபாளையம் சென்றனர். அப்போது கார் பள்ளிபாளையம் அக்கரகாரம் தெருவில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது.

இதில் சாலையில் சென்று கொண்டிருந்த பெண்கள் மீது கார் மோதியது. மேலும், முருகேசன் என்பவரது ஓட்டலினுள் புகுந்து சாலையின் ஓரம் இருந்த மின் கம்பத்தில் மோதி நின்றது. ஓட்டலின் உள்ளே புகுந்ததால் காரின் முன்பகுதி முற்றிலும் சேதமடைந்தது.

மேலும், கார் மோதியதில் கஸ்தூரி,மல்லிகா,கீதா என்ற மூன்று பெண்கள் காயமடைந்தனர். இதில் கீதாவிற்கு கால் முறிவு ஏற்பட்டது. மற்ற இருவருக்கும் தலையில் லேசான காயம் ஏற்பட்டது. அவர்கள் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டனர். ஓட்டல் பணியாளர்கள் யாருக்கும் எந்த வித காயமும் ஏற்படவில்லை. காரில் இருந்தவர்கள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். இதனை அறிந்த பள்ளிபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கார் ஓட்டி வந்த சஞ்சய்யிடம் விசாரணை நடத்திவருகின்றனர்.

மேலும் செய்திகள்