< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
மின்னல் வேகத்தில் தாறுமாறாக வந்த கார்: சாலையோரம் நின்றவர்கள் மீது மோதி விபத்து - வீடியோ...!
|24 Aug 2022 2:56 PM IST
ஈரோடு அருகே மின்னல் வேகத்தில் வந்த கார் சாலையோரம் நின்றவர்கள் மீது மோதியதில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஈரோடு,
ஈரோடு மாவட்டம் ஜம்பையில் சாலையோரத்தில் 2 பேர் நின்று பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த சாலையில் அதிவேகமாக வந்த கார் ஒன்று சாலையோரம் நின்றிருந்தவர்கள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் 2 பேரும் படுகாயம் அடைந்தனர்.
இவர்களை அங்கு இருந்தவர்கள் மீட்டு ஈடுரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், விபத்து தொடர்பான சிசிடிவி பதிவுகளை போலீசார் வெளியீட்டுள்ளனர்.