< Back
மாநில செய்திகள்
திருவல்லிக்கேணியில் சாலையோரம் நின்ற கார் தீப்பிடித்து எரிந்தது
சென்னை
மாநில செய்திகள்

திருவல்லிக்கேணியில் சாலையோரம் நின்ற கார் தீப்பிடித்து எரிந்தது

தினத்தந்தி
|
8 July 2022 9:57 AM IST

திருவல்லிக்கேணியில் சாலையோரம் நின்ற கார் தீப்பிடித்து எரிந்தது.

சென்னை திருவல்லிக்கேணி கஜபதி தெருவில் சாலையோரம் நின்றிருந்த கார் ஒன்று, நேற்று அதிகாலை திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதைகண்ட அங்கிருந்தவர்கள் தீயணைப்பு துறை மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக மயிலாப்பூர் மற்றும் திருவல்லிக்கேணி தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று துரிதமாக செயல்பட்டு காரில் எரிந்த தீயை அணைத்தனர். எனினும் கார் முற்றிலுமாக எரிந்து நாசமானது.

இந்த சம்பவம் குறித்து திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த கார் நீண்ட நாட்களாக அதே பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்ததாக தெரிகிறது. எனவே காரில் தீப்பிடித்து எரிந்தது எப்படி? நாசவேலை காரணமா? என போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்