செங்கல்பட்டு
சோழிங்கநல்லூரில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
|சோழிங்கநல்லூரில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது.
துரைப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் பிரசாந்த் (வயது 38) இவர் தனது பழைய காரை சோழிங்கநல்லூர் தனியார் ஷோரூமில் பழுது பார்த்து விட்டு நேற்று இரவு 7 மணியளவில் வீட்டுக்கு ஓட்டிக்கொண்டு வந்தார். சோழிங்கநல்லூர் சிக்னல் அருகே வந்தபோது அவருடைய கார் திடீரென தீப்பற்றி எரிந்தது. உடனடியாக அவர் காரில் இருந்து இறங்கி விட்டார். அதற்குள் கார் மளமளவென முழுவதுமாக தீப்பற்றி எரிந்தது.
இது குறித்து துரைப்பாக்கம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வாகனம் வருவதற்குள் அருகில் நின்று கொண்டிருந்த தண்ணீர் லாரி மூலம் அக்கம்பக்கத்தினர் தீயை அணைக்க உதவிசெய்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது குறித்து செம்மஞ்சேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.