< Back
மாநில செய்திகள்
சென்னை குரோம்பேட்டையில் சாலையில் சென்ற கார் திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு
மாநில செய்திகள்

சென்னை குரோம்பேட்டையில் சாலையில் சென்ற கார் திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு

தினத்தந்தி
|
25 July 2023 11:15 AM IST

சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

சென்னை,

சென்னை குரோம்பேட்டையில் சாலையில் சென்று கொண்டிருந்த பிஎம்டபிள்யூ கார் திடீரென தீப்பிடித்து எறிந்தது. காரை ஓட்டி வந்த டிரைவர் தீப்பிடித்தவுடன் காரை விட்டு இறங்கியதால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். சாலையில் சென்று கொண்டிருந்த பிஎம்டபிள்யூ கார் திடீரென தீப்பிடித்து எறிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்