< Back
மாநில செய்திகள்
சாலையோர தடுப்பு கம்பியில் ஏறிய கார்
பெரம்பலூர்
மாநில செய்திகள்

சாலையோர தடுப்பு கம்பியில் ஏறிய கார்

தினத்தந்தி
|
31 July 2023 11:56 PM IST

சாலையோர தடுப்பு கம்பியில் மீது மோதிய கார் அதன்மீது ஏறியது.

திருச்சி மாவட்டம், மருங்காபுரி தாலுகா, கொடும்பப்பட்டியை சேர்ந்தவர் அய்யாக்கண்ணு. இவரது மகள் தமிழ்ச்செல்வி (வயது 24). இவர் நேற்று அதிகாலை சென்னையில் இருந்து காரில் சொந்த ஊருக்கு புறப்பட்டார். காரை கொடும்பப்பட்டியை சேர்ந்த செல்வராஜின் மகன் கண்ணன் (32) என்பவர் ஓட்டினார். நேற்று காலை சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, நாரணமங்கலம் அருகே வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தறிகெட்டு ஓடி சாலையோர தடுப்புக்கம்பியில் மோதி, அதன் மீது ஏறி நின்றது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இது குறித்து தகவலறிந்த பாடாலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து காரை அப்புறப்படுத்தினர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்