< Back
மாநில செய்திகள்
திருமுல்லைவாயல் போலீஸ் நிலையம் அருகே வழக்கில் சிக்கிய கார் தீயில் எரிந்து நாசம்
சென்னை
மாநில செய்திகள்

திருமுல்லைவாயல் போலீஸ் நிலையம் அருகே வழக்கில் சிக்கிய கார் தீயில் எரிந்து நாசம்

தினத்தந்தி
|
17 Jan 2023 2:00 PM IST

திருமுல்லைவாயல் போலீஸ் நிலையம் அருகே வழக்கில் சிக்கிய கார் தீப்பிடித்து எரிந்தது.

ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல் போலீஸ் நிலைய சற்றுச்சுவரை ஒட்டி நாகம்மை நகர் செல்லும் சாலையில் சுமார் 4 ஆண்டுகளாக குற்ற வழக்கில் பறிமுத லான கார் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. திடீரென அந்த கார் தீப்பிடித்து எரிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார், உடனடியாக தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. தீ மளமள வென கார் முழுவதும் பரவி கொழுந்து விட்டு எரிந்தது.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த ஆவடி தீயணைப்பு நிலைய வீரர்கள், காரில் எரிந்த தீயை அணைத்தனர். எனினும் கார் முற்றிலும் எரிந்து சேதமானது. இதுபற்றி திருமுல்லைவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து காரில் தீப்பிடித்தது எப்படி? என விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்