< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது பயங்கரமாக மோதிய கார் - பழனியில் பயங்கரம்
|26 Dec 2022 4:48 PM IST
பழனி முருகன் கோவிலுக்கு பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது கார் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒரு பெண் பலியானார்.
பழனி,
பழனி முருகன் கோவிலுக்கு பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது கார் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒரு பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தைப்பூச திருவிழா நெருங்கும் நிலையில் மதுரையிலிருந்து பழனி நோக்கி வந்த பாதயாத்திரை குழுவினரும் கரூரில் இருந்து பழனி நோக்கி வந்த பாதயாத்திரை குழுவினரும் வீரலப்பட்டி பிரிவு அருகே நடந்து வந்து கொண்டிருந்தனர். அப்போது பின்னால் வந்த கார், பக்தர்கள் மீது மோதிய விபத்தில் மதுரையைச் சேர்ந்த செல்வி என்ற பெண் சம்பவ இடத்திலேயே பலியானார்.
பின்னர் சிகிச்சை பெற்று வந்த மற்றொருவரும் பலியானார். காவல்துறையினர் தப்பியோடிய கார் டிரைவரை தீவிரமாகத் தேடி வருகின்றனர். அத்துடன் இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 4 பக்தர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.