< Back
மாநில செய்திகள்
சாலையோர மின்கம்பத்தில் கார் மோதி விபத்து
திருவள்ளூர்
மாநில செய்திகள்

சாலையோர மின்கம்பத்தில் கார் மோதி விபத்து

தினத்தந்தி
|
10 Nov 2022 7:39 PM IST

கும்மிடிப்பூண்டி அருகே சாலையோர மின்கம்பத்தில் கார் மோதி விபத்துக்குள்ளானது. அதில் பயணம் செய்த 5 பேர் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர்.

விபத்து

ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்த புகைப்பட கலைஞர்களான வாலிபர்கள் 5 பேர், புதுச்சேரியில் புகைப்பட ஆல்பத்திற்கான பதிவுகளை முடித்து விட்டு சொந்த ஊரான விஜயவாடாவிற்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தனர். காரை ரவி (வயது 24) என்பவர் ஓட்டிச் சென்றார்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை அந்த கார், திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது.

அப்போது சாலையோர மின்கம்பத்தில் மோதியது. இதனால் அந்த மின்கம்பம், அடியோடு பெயர்த்து உடைத்து கொண்டு சுமார் 20 மீட்டர் தூரம் வரை இழுத்து செல்லப்பட்ட நிலையில் கார், சாலையோர இரும்பு தடுப்பில் மோதி விபத்துக்குள்ளாகி நின்றது.

உயிர் தப்பினர்

இந்த விபத்தில் காரில் பயணித்த 5 பேரும் சீட் பெல்ட் அணிந்திருந்ததால் பாதுகாப்பு பலூன் விரிந்து காயம் ஏதுமின்றி அதிஷ்டவசமாக உயிர் தப்பினர். மேலும் மின்வயர் அறுந்த போது மின்சாரம் உடனடியாக துண்டிக்கப்பட்ட நிலையில் பெரும் விபத்தும் தவிர்க்கப்பட்டது.

இந்த விபத்து குறித்து ஆரம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்