< Back
மாநில செய்திகள்
சென்னை
மாநில செய்திகள்
துரைப்பாக்கத்தில் சாலையில் சென்ற கார் தீப்பிடித்து எரிந்தது
|28 July 2023 10:15 AM IST
சாலையில் சென்ற கார் திடீரென தீப்பிடித்து எரிந்து முற்றிலும் நாசம் ஆனது.
துரைப்பாக்கம்,
சென்னையை அடுத்த நாவலூர் பகுதியில் உள்ள புதிய யார்டு பகுதிக்கு தனியார் கார் நிறுவனம் தங்களுக்கு சொந்தமான 200 புதிய கார்களை நேற்று அதிகாலை வானகரத்தில் இருந்து கொண்டு சென்றனர். துரைப்பாக்கம் 100 அடி சாலையில் சென்றபோது திடீரென ஒரு காரில் இருந்து புகை வந்தது. உடனடியாக காரை நிறுத்திவிட்டு டிரைவர் கீழே இறங்கி பார்த்தார்.
அதற்குள் காரில் தீப்பிடித்து மளமளவென பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. இதுபற்றி தகவல் அறிந்து வந்த தீயணைப்பு நிலைய வீரர்கள், காரில் எரிந்த தீயை போராடி அணைத்தனர். எனினும் கார் முற்றிலும் எரிந்து நாசமானது. காரில் ஏற்பட்ட தீ விபத்துக்கான காரணம் குறித்து துரைப்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.