திருவள்ளூர்
பள்ளிப்பட்டு அருகே கார் தீப்பிடித்து எரிந்து சேதம்
|பள்ளிப்பட்டு அருகே கார் தீப்பிடித்து எரிந்து எலும்பு கூடானது.
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே 3 கிலோமீட்டர் தொலைவில் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் எஸ்.ஆர்.புரம் மண்டலம் நெலவாய் கிராமத்தில் தனியார் சர்க்கரை ஆலை உள்ளது. இந்த சர்க்கரை ஆலையில் துணை மேலாளராக கபிலன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் நேற்று பள்ளிப்பட்டில் இருந்து சர்க்கரை ஆலைக்கு தனது காரில் சென்று கொண்டிருந்தார். காரை டிரைவர் ஓட்டிச் சென்றார். சர்க்கரை ஆலைக்கு ஒரு கிலோ மீட்டர் தூரம் இருக்கும்போது காரில் இருந்து புகை கிளம்பியது. இதை பார்த்த டிரைவர் காரை நிறுத்திவிட்டு கீழே இறங்கினார். காரில் இருந்த துணை மேலாளர் கபிலன் கீழே இறங்கி பார்த்தபோது காரில் திடீர் என்று தீப்பிடித்து எரிந்தது. இது குறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் தீயணைப்பு வீரர்கள் அங்கு வந்து சேருவதற்குள் கார் முழுவதும் எரிந்து எலும்பு கூடானது. இந்த விபத்தில் காரில் இருந்த துணை மேலாளர் கபிலன் மற்றும் டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தரப்பினார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.