< Back
மாநில செய்திகள்
அண்ணாசாலையில் கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
சென்னை
மாநில செய்திகள்

அண்ணாசாலையில் கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

தினத்தந்தி
|
26 July 2022 8:21 AM IST

அண்ணாசாலையில் காரின் முன்பகுதியில் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்தவர் சுரேந்தர் சிங். இவர், நேற்று மதியம் தனது வீட்டில் இருந்து சிந்தாதிரிப்பேட்டைக்கு காரில் சென்று கொண்டிருந்தார். தேனாம்பேட்டை அன்பகம் அருகே அண்ணாசாலையில் சென்றபோது காரின் முன்பகுதியில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சுரேந்தர் சிங், உடனடியாக காரை சாலையிலேயே நிறுத்திவிட்டு கீழே இறங்கி விட்டார்.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த தேனாம்பேட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள், துரிதமாக செயல்பட்டு காரில் எரிந்த தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டுவந்தனர். எனினும் காரின் முன்பகுதி முழுவதும் எரிந்து நாசமானது. காரின் என்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக கார் தீப்பிடித்து எரிந்தது விசாரணையில் தெரியவந்தது.

மேலும் செய்திகள்