< Back
மாநில செய்திகள்
சென்னை விமான நிலையத்தில் உள்ள பணிமனையில் கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
சென்னை
மாநில செய்திகள்

சென்னை விமான நிலையத்தில் உள்ள பணிமனையில் கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

தினத்தந்தி
|
15 Jan 2023 12:23 PM IST

சென்னை விமான நிலையத்தில் உள்ள பணிமனையில் கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய வளாகத்துக்குள் ஏர் இந்தியா விமான நிறுவனத்துக்கு சொந்தமான பணிமனை உள்ளது. அங்கு ஏர் இந்தியா நிறுவனத்தின் வாகனங்களை பழுது பார்ப்பது, சர்வீஸ் செய்யும் பணிகள் நடைபெறுகின்றன. மேலும் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்புவதற்கான பெட்ரோல், டீசல் நிலையமும் உள்ளது. இந்த நிலையில் பணிமனைக்கு வந்த ஒரு கார், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அங்கு அமைக்கப்பட்டு இருந்த தடுப்புகள் மீது வேகமாக மோதியது. இதில் காரின் பெட்ரோல் டேங்க் உடைந்து பெட்ரோல் கொட்டியதால் கார் தீப்பிடித்து எரிய தொடங்கியது.

இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கார் தீப்பிடித்து எரிந்த இடத்துக்கு அருகில் பெட்ரோல், டீசல் நிலையங்களும் இருப்பதால் அதிர்ச்சி அடைந்த பணிமனை ஊழியர்கள், சென்னை விமான நிலைய தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக 2 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் அரை மணி நேரம் போராடி காரில் எரிந்த தீயை அணைத்தனர். எனினும் கார் முழுவதுமாக எரிந்து நாசமானது.

தீ விபத்துக்குள்ளான கார் டிரைவர் தப்பி ஓடிவிட்டார். இந்த சம்பவம் குறித்து சென்னை விமான நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை விமான நிலைய போலீசாரும் விசாரணை நடத்துகின்றனர்.

மேலும் செய்திகள்