< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
ஆதம்பாக்கத்தில் சுவரை உடைத்து பள்ளத்தில் பாய்ந்த கார்
|25 Dec 2022 2:19 PM IST
ஆதம்பாக்கத்தில் சுவரை உடைத்து பள்ளத்தில் கார் பாய்ந்தது.
சென்னையை அடுத்த ஆதம்பாக்கம் தில்லை கங்கா நகர் பகுதியை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 30). கம்ப்யூட்டர் என்ஜினீயரான இவர், நேற்று இரவு தனது நண்பர்களுடன் காரில் சென்றார்.
ஆதம்பாக்கம்-மேடவாக்கம் மெயின் ரோட்டில் திடீரென மழைநீர் கால்வாய் அருகே பாதை இருப்பதாக கருதி சென்றனர். ஆனால் கட்டுப்பாட்டை இழந்த கார், மழைநீர் கால்வாய் மீது ஏறி சாலையோர சுவரை உடைத்து விட்டு பள்ளத்தில் பாய்ந்தது. இதனால் காரின் பின்பகுதி அந்தரத்தில் தூக்கியபடி நின்றது. இதில் காரில் இருந்த யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை. பின்னர் பொதுமக்கள் உதவியுடன், அந்தரத்தில் தொங்கிய படி இருந்த காரை மீட்டனர். இது குறித்து ஆதம்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.