< Back
மாநில செய்திகள்
சாலையோர வியாபாரிகளுக்கு கடன் உதவி வழங்கும் முகாம்
திருநெல்வேலி
மாநில செய்திகள்

சாலையோர வியாபாரிகளுக்கு கடன் உதவி வழங்கும் முகாம்

தினத்தந்தி
|
11 Aug 2023 2:51 AM IST

நெல்லையில் சாலையோர வியாபாரிகளுக்கு கடன் உதவி வழங்கும் முகாம் நடந்தது.

நெல்லை மாநகராட்சி மற்றும் வங்கிகள் சார்பில் சாலையோர வியாபாரிகளுக்கு கடன் உதவி வழங்கும் முகாம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. மேயர் பி.எம்.சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர். முகாமில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, இந்தியன் வங்கி, ஸ்டேட் வங்கி, கனரா, மாவட்ட கூட்டுறவு மற்றும் எச்.டி.எப்.சி. உள்ளிட்ட பல்வேறு வங்கி அதிகாரிகள் கலந்து கொண்டு, 250-க்கும் மேற்பட்ட சாலையோர வியாபாரிகளிடம் இருந்து விண்ணப்பங்களை பெற்று கடன் வழங்குவதற்கு ஏற்பாடு செய்தனர்.

மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கணேஷ் மணிகண்டன், நிதி சார் கல்வி ஆலோசகர் பார்த்தீபன் ஆகியோர் பேசினார்கள். அப்போது கடன் பெறும் வியாபாரிகளுக்கு முதல் தவணையாக ரூ.10 ஆயிரமும், அதை முறையாக செலுத்தியவர்களுக்கு 2-வது தவணையாக ரூ.20 ஆயிரமும், 3-வது தவணையாக ரூ.50 ஆயிரமும் வழங்கப்படுகிறது. இதற்கு வட்டி மானியமாக மத்திய அரசு ஸ்வாநிதி திட்டத்தின் கீழ் 7 சதவீதம் வழங்குகிறது.

இந்த முகாமில் 50 பேருக்கு உடனடியாக ரூ.10 லட்சம் வரை கடன் ஆணைகளை மேயர், துணை மேயர், ஆணையாளர் ஆகியோர் வழங்கினர். இந்த முகாம் வருகிற 20-ந்தேதி வரை 10 நாட்களுக்கு மாநகராட்சி 4 மண்டல அலுவலகங்களிலும் நடைபெறும். இதில் சாலையோர வியாபாரிகள் கலந்து கொண்டு பயன் அடையலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா தலைமையில் ஊழியர்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்