< Back
மாநில செய்திகள்
திருவள்ளூர் நகராட்சி எல்லைகுட்பட்ட பகுதிகளில் சாலையோர வியாபாரிகள் கடனுதவி பெற முகாம்
திருவள்ளூர்
மாநில செய்திகள்

திருவள்ளூர் நகராட்சி எல்லைகுட்பட்ட பகுதிகளில் சாலையோர வியாபாரிகள் கடனுதவி பெற முகாம்

தினத்தந்தி
|
13 Aug 2023 9:30 PM IST

தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் திருவள்ளூர் நகராட்சி எல்லைகுட்பட்ட பகுதிகளில் உள்ள சாலையோர வியாபாரிகளுக்கு கடன் வழங்க வங்கிகள் முடிவு செய்தது.

அதன்படி சாலையோர வியாபாரிகளிடம் இருந்து 2,023 விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இதில் 1,152 பேருக்கு கடனுதவி வழங்கப்பட்டது. மீதமுள்ள 871 பேருக்கு வழங்கப்படவில்லை. எனவே கடனுதவி பெறாதவர்கள் மீண்டும் கடன் பெறும் வகையில் திருவள்ளூர் நகராட்சி ஆணையர் போ.வி.சுரேந்திர ஷா தலைமையில் வங்கிகளுடனான கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட திட்ட அலுவலர், முன்னோடி வங்கி மேலாளர் மற்றும் 17 வங்கி மேலாளர்கள், வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் சம்பந்தப்பட்ட வங்கி மேலாளர்களுக்கு தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ள வழிமுறைகளை பின்பற்றி சாலையோர வியாபாரிகளுக்கு உடனடியாக கடன் தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது. மேலும் 7010270560, 8608242774, 7397133219 ஆகிய செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு முகாம் நடைபெறும் இடம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

மேலும் செய்திகள்