திருவள்ளூர்
திருத்தணியில் 50 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் தவறி விழுந்த கன்றுக்குட்டி உயிருடன் மீட்பு
|திருத்தணியில் 50 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் தவறி விழுந்த கன்றுக்குட்டி தீயணைப்பு வீரர்கள் போராடி உயிருடன் மீட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகராட்சிக்குட்பட்ட கண்ணபிரான் நகரை சேர்ந்தவர் லோகநாதன். இவரது மகன் பாலசுப்பிரமணி. கோவில் பூசாரியான இவர் பசுகன்றுக்குட்டி ஒன்றை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் வழக்கம்போல் பசுகன்றை மேய்ச்சலுக்கு விட்டுள்ளார். அப்போது திருத்தணி புது வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த நாகசாமி என்பவருக்கு சொந்தமான 50 அடி ஆழமுள்ள விவசாய கிணற்றுக்குள் நேற்று மதியம் பசுகன்று திடீரென தவறி விழுந்தது.
கிணற்றில் விழுந்து கன்றுக்குட்டி சத்தமிடவே உரிமையாளர் பாலசுப்ரமணி கிணற்றில் சென்று பார்த்துள்ளார். அப்போது கன்று குட்டி கிணற்றில் தவித்துக்கொண்ருந்ததைக் கண்டு அதிர்சியடைந்த அவர், உடனடியாக திருத்தணி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் அரசு தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிணற்றுக்குள் விழுந்து 1 மணி நேரம் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த கன்றுக்குட்டியை உயிருடன் மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.