< Back
மாநில செய்திகள்
திருவாரூர்
மாநில செய்திகள்
மன்னார்குடியில் இருந்து கொரடாச்சேரிக்கு பஸ் இயக்க வேண்டும்
|21 Oct 2023 12:15 AM IST
மன்னார்குடியில் இருந்து வெள்ளக்குடி வழியாக கொரடாச்சேரிக்கு பஸ் இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கூத்தாநல்லூர் அருகே உள்ள வெள்ளக்குடி வழியாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மன்னார்குடியில் இருந்து கொரடாச்சேரிக்கு அரசு பஸ் இயக்கப்பட்டது. இதனால் சித்தாம்பூர், வெள்ளக்குடி, விழல்கோட்டகம், கற்கோவில், வாழச்சேரி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள், பள்ளி மாணவர்கள் மன்னார்குடி, கொரடாச்சேரி, திருவாரூர் போன்ற பகுதிகளில் உள்ள ஊர்களுக்கு சென்று வருவதற்கு ஏதுவாக இருந்தது. சாலை குறுகலாகவும், சேதமடைந்தும் இருந்ததால் அந்த வழித்தடத்தில் இயக்கப்பட்ட அரசு பஸ் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்டதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். தற்போது சாலை அகலப்படுத்தி முழுமையான தார்சாலையாக சீரமைப்பு செய்யப்பட்டுள்ளதால் நிறுத்தப்பட்ட அரசு பஸ்சை மீண்டும் இயக்க வேண்டும் என்று பள்ளி மாணவர்கள், அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.