< Back
மாநில செய்திகள்
குண்டும், குழியுமாக காணப்படும் தேசிய நெடுஞ்சாலை
திருவாரூர்
மாநில செய்திகள்

குண்டும், குழியுமாக காணப்படும் தேசிய நெடுஞ்சாலை

தினத்தந்தி
|
24 Oct 2022 12:15 AM IST

திருவாரூரில் குண்டும், குழியுமாக காணப்படும் தேசிய நெடுஞ்சாலை சீரமைக்கப்படுமா? என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.

திருவாரூரில் குண்டும், குழியுமாக காணப்படும் தேசிய நெடுஞ்சாலை சீரமைக்கப்படுமா? என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.

தேசிய நெடுஞ்சாலை

தஞ்சை-நாகை தேசிய நெடுஞ்சாலை திருவாரூர் நகர் வழியாக செல்கின்றது. இந்த தேசிய நெடுஞ்சாலை இருவழி சாலையாக மாற்றி அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் திருவாரூர் நகர் பகுதி வழியாக தேசிய நெடுஞ்சாலை செல்லமால், புறவழிசாலையாக அமைத்திட திட்டமிடப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

இதனால் திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முதல் சீனுவாசபுரம் வரையிலான தேசிய நெடுஞ்சாலை பல ஆண்டுகளாக சீரமைப்பு செய்யப்படாமல் உள்ளது.

குண்டும், குழியுமாக காணப்படுகிறது

தற்போது இந்த சாலை சேதமடைந்து ஜல்லி கற்கள் பெயர்ந்து குண்டு, குழியுமாக காட்சியளிக்கிறது. போக்குவரத்துக்கு பயனற்ற சாலையாக மாறியுள்ளதால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர். குறிப்பாக திருவாரூர் மேம்பாலம் முதல் கலெக்டர் அலுவலகம் வரையிலும், இதேபோல் வாளவாய்கால் பகுதியில் சாலையில் மிகப்பெரிய பள்ளங்கள் உருவாகி விபத்து ஏற்படும் ஆபத்தான நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குண்டும், குழியுமாக காணப்படும் சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்