< Back
மாநில செய்திகள்
போலீஸ் பேரி கார்டை தலையில் மாட்டிக்கொண்டு ஓடிய காளை... ஜல்லிக்கட்டில் நிகழ்ந்த சம்பவங்கள்
மாநில செய்திகள்

போலீஸ் பேரி கார்டை தலையில் மாட்டிக்கொண்டு ஓடிய காளை... ஜல்லிக்கட்டில் நிகழ்ந்த சம்பவங்கள்

தினத்தந்தி
|
21 Jan 2023 6:38 AM IST

மாட்டு உரிமையாளர்கள் காத்திருந்து அந்த காளையைப் பிடிக்க முற்பட்டபோது தடுப்புகளை மீறி குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது.

மதுரை,

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி ஜனவரி 15-ஆம் தேதி மதுரை மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு வணிகவரித்துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்றது. இதில் 737 காளைகள் 250 மாடிப்படி வீரர்கள் பங்கேற்று 11 சுற்றுகளாகப் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்த போட்டியில் சிறுவர்கள் மாட்டு உரிமையாளர்கள், மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள், காவலர்கள் என 61 பேர் காயமடைந்தனர்.

போட்டிகளில் எவ்வித அசம்பாவிதம் நடைபெறாமல் இருப்பதற்கும், ஜல்லிக்கட்டு போட்டியில் அனுமதி இல்லாத காளைகளை உள்ளே நுழையவிடாமல் இருப்பதற்கு சாலையின் இருபுரங்கள் கம்புகள் கட்டப்பட்டு பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

குறிப்பாக ஜல்லிக்கட்டு காளைகள் கொண்டு வரும் பாதையிலிருந்து வாடிவாசல், அதனைத் தொடர்ந்து போட்டியில் பங்கேற்ற ஜல்லிக்கட்டு காளைகளை கலெக்சன் செய்யும் இடம் வரை சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவிற்குக் கம்புகள் கட்டப்பட்டிருந்தது.

இந்த நிலையில் வாடிவாசலிலிருந்து வெளியேறிய காலை வந்து அவனியாபுரம் வழியாக வில்லாபுரம் செல்லும் பாதையில் தடுப்பு வேலை ஒன்று தலையில் மாட்டிய நிலையில் சாலையில் ஓடும் காட்சி ஒன்று வரலாகி வருகிறது. மேலும் பாலமேடு அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த கருப்பு நிற காரி காளை ஜல்லிக்கட்டு போட்டியில் அவிழ்த்து விடப்பட்டது. அந்த காளை வாடிவாசலிருந்து வெளியேறிய பிறகு நிற்காமல் கலெக்சன் பாயிண்ட் வரை சென்றது.

அங்கு மாட்டு உரிமையாளர்கள் காத்திருந்து அந்த காளையைப் பிடிக்க முற்பட்டபோது தடுப்புகளை மீறி குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது. தொடர்ந்து கருப்பு நிற காரி மாடு அருகில் இருந்த வாகனங்கள் மீது ஏறி ஓட்டு வீட்டின் மேற்கூரையில் முதலில் ஏறி சென்றது.

தொடர்ந்து கூட்டத்தைக் கண்ட ஜல்லிக்கட்டு காளை தப்பிக்க வழி தெரியாமல் அருகில் இருந்த ஹாஸ்பிட்டாஸ் ஷீட் மீது ஏறி இறங்க முற்பட்டபோது ஹாஸ்பிட்டாஸ் சீட்டு உடைந்து ஜல்லிக்கட்டு காளை வீட்டிற்குள் புகுந்தது. இதனை கண்ட மற்ற மாட்டு உரிமையாளர்கள் ஹாஸ்பிட்டாஸ் சீட்டை முழுவதையும் உடைத்து மாட்டை லாபமாக மீட்டனர்.

தற்போது அந்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. ஜனவரி 15-ஆம் தேதி நடைபெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு பரிசுகளும், கோப்பைகளும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்