< Back
மாநில செய்திகள்
மறைமலைநகர் அருகே கொலை வழக்கில் சிறைக்கு சென்று ஜாமீனில் வந்த கொத்தனார் தற்கொலை
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

மறைமலைநகர் அருகே கொலை வழக்கில் சிறைக்கு சென்று ஜாமீனில் வந்த கொத்தனார் தற்கொலை

தினத்தந்தி
|
26 Nov 2022 4:43 PM IST

மறைமலைநகர் அருகே கொலை வழக்கில் சிறைக்கு சென்று ஜாமீனில் வந்த கொத்தனார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அடுத்த மல்ரோசாபுரம் மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் முனியசாமி (வயது 48). கொத்தனார். இவருக்கு மறைமலைநகர் பேரமனூர் சாமியார் கேட் பகுதியை சேர்ந்த ஜோதி என்ற பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டு இருவரும் பழகி வந்தனர்.

இந்த நிலையில் ஜோதி மீது சந்தேகம் அடைந்த முனியசாமி கடந்த ஜூலை மாதம் அவரை சுத்தியலால் அடித்து கொலை செய்தார்.

இந்த கொலை வழக்கில் சிறைக்கு சென்று சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்த முனியசாமி நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த மறைமலைநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முனியசாமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கள்ளக்காதலி கொலை வழக்கில் சிறைக்கு சென்று வெளியே வந்த கொத்தனார் முனியசாமி தானாக தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாராவது அடித்து கொலை செய்து தூக்கில் தொங்க விட்டனரா? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்