< Back
மாநில செய்திகள்
தட்டார்மடம் அருகே பெற்றோருடன் ஆட்டோவில் சென்ற சிறுவன் தவறி விழுந்து பரிதாபமாக இறந்து போனான்.
தூத்துக்குடி
மாநில செய்திகள்

தட்டார்மடம் அருகே பெற்றோருடன் ஆட்டோவில் சென்ற சிறுவன் தவறி விழுந்து பரிதாபமாக இறந்து போனான்.

தினத்தந்தி
|
9 Oct 2023 12:15 AM IST

தட்டார்மடம் அருகே பெற்றோருடன் ஆட்டோவில் சென்ற சிறுவன் தவறி விழுந்து பரிதாபமாக இறந்து போனான்.

தட்டார்மடம்:

தட்டார் மடம் அருகே பெற்றோருடன் ஆட்டோவில் சென்ற சிறுவன் தவறி விழுந்து பரிதாபமாக இறந்து போனான்.

ஆட்டோவில் பயணம்

நாசரேத் அருகேயுள்ள உடையார்குளத்தை சேர்ந்தவர் விஜயன். இவர் நாசரேத் பகுதியில் கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். இவர் வீட்டிலிருந்து தட்டார்மடம் அருகேயுள்ள பொத்தகாலன் விளையில் உள்ள திருக்கல்யாண மாதா தேவாலயத்திற்கு நேற்று முன்தினம் மனைவி ஏஞ்சல் (வயது 33), மகன்கள் ஆண்டோ பிரான்சிஸ் சேவியர் (10), செல்டோன் லூர்து சேவியர் (4) ஆகியோருடன் ஆட்டோவில் புறப்பட்டு சென்றார். பிற்பகலில் தேவாலயத்திலிருந்து மீண்டும் ஆட்டோவில் குடும்பத்தினருடன் வீட்டுக்கு விஜயன் வந்துகொண்டிருந்தார்.

தவறி விழுந்த சிறுவன்

பொத்தகாலன்விளை ராஜீவ்நகர் பகுதியில் ஆட்டோ வந்தபோது பின்பக்க கதவு திடீரென திறந்துள்ளது. அப்போது கண்இமைக்கும் நேரத்தில் பின்சீட்டில் அமர்ந்திருந்த ஆண்டோ பிரான்சிஸ் சேவியர் ஆட்டோவிலிருந்து ரோட்டில் தவறி விழுந்து படுகாயம் அடைந்தான். தங்கள் கண்எதிரில் ரத்தவெள்ளத்தில் கிடந்த மகனை விஜயனும், அவரது மனைவியும் சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர், ஆண்டோ பிரான்சிஸ் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது. அவனது உடலை பார்த்து விஜயனும், அவரது குடும்பத்தினரும் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

டிரைவரிடம் விசாரணை

இதுகுறித்த தகவலின் பேரில் தட்டார்மடம் போலீசார் விரைந்து சென்று சிறுவனின் உடலை கைப்பற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து தட்டார்மடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு ஆட்டோ டிரைவர் நாசரேத் குயின்ஸ் தெருவை சேர்ந்த ஜெபுஏசு மர்வின்குமார் (45) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். ஆட்டோவில் இருந்து சிறுவன் தவறி விழுந்து பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்