< Back
மாநில செய்திகள்
மதுபானம் விற்ற வாலிபா் சிக்கினார்
தேனி
மாநில செய்திகள்

மதுபானம் விற்ற வாலிபா் சிக்கினார்

தினத்தந்தி
|
20 March 2023 12:15 AM IST

போடியில் மதுபானம் விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

போடி தாலுகா போலீசார் நேற்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சில்லமரத்துப்பட்டி டாஸ்மாக் கடை அருகே வாலிபர் ஒருவா் நின்று கொண்டிருந்தார். அவரை சந்தேகத்தின்பேரில் பிடித்து சோதனை செய்தனர். அதில் அவரிடம் 35 மதுபாட்டில்கள் இருந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் தேவாரத்தைச் சேர்ந்த விக்னேஷ்வர் (வயது 27) என்பதும், மதுபாட்டில்களை மொத்தமாக வாங்கி சில்லறை விலையில் விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்