< Back
மாநில செய்திகள்
சிறுமியை கேலி, கிண்டல் செய்த வாலிபர் போக்சோவில் கைது
கரூர்
மாநில செய்திகள்

சிறுமியை கேலி, கிண்டல் செய்த வாலிபர் போக்சோவில் கைது

தினத்தந்தி
|
13 Sept 2023 12:37 AM IST

சிறுமியை கேலி, கிண்டல் செய்த வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

குளித்தலை மலையப்பநகர் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீராம் (வயது 20), பெயிண்டர். இவர் 14 வயதுடைய பள்ளி சிறுமியை பின் தொடர்ந்து சென்று காதலிக்கிறாயா? என்று கேட்டு கேலி கிண்டல் செய்துள்ளார். மேலும் சிறுமி வீட்டின் முன்பு அவரது கையை பிடித்து இழுத்து வம்பு செய்துள்ளார். இதன் காரணமாக அச்சிறுமி பயந்து கொண்டு பள்ளிக்கு செல்லாமல் இருந்துள்ளார்.

இதையறிந்த அச்சிறுமியின் தாயார் ஸ்ரீராமை போனில் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து அச்சிறுமியின் தந்தை குளித்தலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஸ்ரீராமை போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்