நாகப்பட்டினம்
சிறுவனுக்கு பாலியல் தொல்லை
|நாகையில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பெண் காப்பாளரை போக்சோவில் போலீசார் கைதுசெய்தனர்.
நாகையில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பெண் காப்பாளரை போக்சோவில் போலீசார் கைதுசெய்தனர்.
குழந்தைகள் காப்பகம்
நாகையில் ஒரு தனியார் குழந்தைகள் காப்பகம் உள்ளது. இதில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை சேர்ந்த சசிகலா(வயது45) என்பவர் காப்பாளராக வேலை பார்த்து வந்தார்.
இந்த காப்பகத்தில் சுனாமியில் பெற்றோரை இழந்த குழந்தைகள் மற்றும் தாய், தந்தையை இழந்த குழந்தைகள் என 100-க்கும் மேற்பட்டோர் தங்கி படித்து வருகின்றனர்.
பாலியல் ெதால்லை
20 குழந்தைகளுக்கு ஒரு காப்பாளர் என்ற அடிப்படையில் பெண் காப்பாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டு தனித்தனியாக கவனித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த காப்பகத்தில் தங்கி உள்ள 12 வயது சிறுவனுக்கு, காப்பாளர் சசிகலா இரவு நேரங்களில் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து அந்த சிறுவன் காப்பக இல்ல நிர்வாகிகளிடம் தெரிவித்துள்ளார்.
ெபண் காப்பாளர் போக்சோவில் கைது
இதுதொடர்பாக காப்பக இல்ல நிர்வாகி வெளிப்பாளையம் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில்
போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சசிகலாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.