நீலகிரி
சிறுவனுக்கு பாலியல் தொல்லை
|கூடலூர் அருகே சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
கூடலூர்,
கூடலூர் அருகே சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
பாலியல் தொல்லை
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே தேவர்சோலை ஒற்றவயல் பகுதியை சேர்ந்தவர் சலாம் (வயது 65). டிரைவர். இவர் 9 வயது சிறுவனுக்கு மிட்டாய் வாங்கி தருவதாக கூறி தனியாக அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்து உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் வீட்டில் சிறுவன் மிகவும் சோர்வாக காணப்பட்டான். இதுதொடர்பாக பெற்றோர் சிறுவனிடம் விசாரித்தனர்.
அப்போது தன்னிடம் முதியவர் பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாக தெரிவித்தான். இதுகுறித்து சிறுவனின் பெற்றோர் கூடலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுசிலா விசாரணை நடத்தினார். இதில் சிறுவனுக்கு மிட்டாய் வாங்கி தருவதாக கூறி அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது.
முதியவர் கைது
இதையடுத்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, சலாமை கைது செய்தனர். பின்னர் ஊட்டி மகிளா கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதுகுறித்து போலீசார் கூறும்போது, கூடலூர் பகுதியில் ஜீப் டிரைவராக சலாம் பணியாற்றி வருகிறார். அப்போது 9 வயது சிறுவனிடம் சகஜமாக பழகி வந்துள்ளார். நன்கு பழக்கமான நிலையில், சிறுவனுக்கு மிட்டாய் வாங்கி தருவதாக கூறி அழைத்து உள்ளார்.
இதை நம்பி சிறுவன் சென்றுள்ளான். இதை பயன்படுத்தி முதியவர் பாலியல் தொந்தரவு செய்து உள்ளார். பின்னர் சிறுவன் தனது பெற்றோரிடம் நடந்த விவரங்களை எடுத்துக் கூறியுள்ளான். தொடர்ந்து மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதன் அடிப்படையில், போக்சோவில் முதியவர் கைது செய்யப்பட்டு உள்ளார் என்றனர்.