< Back
மாநில செய்திகள்
கேளம்பாக்கம் அருகே தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்த சிறுவன் சாவு
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

கேளம்பாக்கம் அருகே தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்த சிறுவன் சாவு

தினத்தந்தி
|
7 Feb 2023 4:04 PM IST

கேளம்பாக்கம் அருகே தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்த சிறுவன் பரிதாபமாக இறந்தான்.

சிறுவன் மாயம்

கேளம்பாக்கத்தை அடுத்த வாணியஞ்சாவடி திருவள்ளுவர் சாலையில் தனியார் விடுதி உள்ளது. இங்கு நேபாளத்தை சேர்ந்த சூரத்பகதூர் (வயது 43) என்பவர் குடும்பத்துடன் தங்கி வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் ராஜேஷ் (வயது 5). நேற்று மாலை விடுதியில் உள்ள தண்ணீர் தொட்டி அருகே ராஜேஷ் விளையாடிக்கொண்டு இருந்தான். சிறிது நேரம் கழித்து பார்த்தபோது அவன் மாயமானான். அவனை குடும்பத்தினர் தேடிவந்தனர்.

சாவு

இந்தநிலையில் தண்ணீர் தொட்டியில், ராஜேஷ் மூழ்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக ராஜேஷை மீட்ட அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே ராஜேஷ் இறந்து விட்டதாக தெரிவித்தனர். தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து சிறுவன் இறந்தது தெரியவந்தது.

இது குறித்து கேளம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்