< Back
மாநில செய்திகள்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்
மழையில் ஆனந்த குளியல்
|13 Oct 2023 12:21 AM IST
மழையில் ஆனந்த குளியல் ஒருவர் போட்டார்.
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டையில் நேற்று மாலை கன மழை பெய்தததால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. அப்போது கந்தர்வகோட்டை பஸ் நிலையத்தில் ஒருவர் மழையில் நனைந்தபடி ஆனந்த குளியல் போட்டதுடன், தான் அணிந்திருந்த துணிகளையும், சாலையில் ஓடிய தண்ணீரில் துவைத்தார். இதனை பஸ் நிலையத்தில் மழைக்காக ஒதுங்கி நின்ற பயணிகள் பார்த்து ரசித்தனர். மழையில் ஆனந்த குளியல் போட்டவரை படத்தில் காணலாம். இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலானது.