< Back
மாநில செய்திகள்
சுடுகாட்டு பாதையை சீரமைக்கக்கோரி கருப்பு கொடி கட்டி போராட்டம்
அரியலூர்
மாநில செய்திகள்

சுடுகாட்டு பாதையை சீரமைக்கக்கோரி கருப்பு கொடி கட்டி போராட்டம்

தினத்தந்தி
|
27 Sept 2023 12:51 AM IST

சுடுகாட்டு பாதையை சீரமைக்கக்கோரி கருப்பு கொடி கட்டி போராட்டம் நடந்தது.

செந்துறை:

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே நக்கம்பாடி கிராமத்தில் உள்ள காலனி தெருவிற்கு உப்பு ஓடையை தாண்டி சுடுகாடு உள்ளது. இந்த உப்பு ஓடையில் பாலம் கட்டித்தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதனைத் தொடர்ந்து சில ஆண்டுகளுக்கு முன்பு ஓடையில் பாலம் கட்டப்பட்டது. தரமற்ற முறையில் கட்டப்பட்ட இந்த பாலம் சில மாதங்களிலேயே இடிந்து விழுந்தது.

அதனைத் தொடர்ந்து சுடுகாட்டுப்பாதையை சீரமைக்கக்கோரி அப்பகுதி மக்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக நேற்று தங்களது தெருக்கள் மற்றும் வீடுகளில் கருப்பு கொடி கட்டிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்