< Back
மாநில செய்திகள்

மாநில செய்திகள்
அருள்மொழிச் சோழர் மற்றும் பிரபாகரன் வாழ்க்கை வரலாறு குறித்த திரைப்படம் - சீமான் தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்குகிறார்

6 Oct 2022 12:00 AM IST
அருள்மொழிச் சோழர் மற்றும் பிரபாகரன் வாழ்க்கை வரலாறு குறித்த திரைப்படத்தை வெற்றிமாறன் இயக்க உள்ளதாக சீமான் கூறியுள்ளார்.
சென்னை,
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது,
தமிழர்களின் போற்றுதற்குரிய மூதாதை, அரசனுக்கரசன் அருள்மொழிச் சோழனின் உண்மையான வரலாற்றையும், இந்த நூற்றாண்டின் இணையற்ற விடுதலைப் போராளி தமிழ்த்தேசிய தலைவர் அண்ணன் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் வரலாற்றையும் ஆகச்சிறந்த கலைவடிவமாக நான் தயாரிக்க, என் அன்புத்தம்பி வெற்றிமாறன் இயக்குவார்.
வரலாற்றில் புறக்கணிக்கப்பட்ட இனத்தின் மக்கள், தங்களுக்கான வரலாற்றைத் தாங்களே எழுதுவார்கள் என்ற அறிவாசான் அண்ணல் அம்பேத்கரின் புரட்சி மொழிக்கேற்ப, ஒரு நாள் எங்களுக்கான வரலாற்றை நாங்களே எழுதும் நாள் வரும். அன்றைக்கு தமிழர்கள் நாங்கள் யாரென்று உலகத்திற்குத் தெரியவரும்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.