கோயம்புத்தூர்
மணி காட்டாத மணிக்கூண்டு
|மணிக்கூண்டு... இது கோவையின் அடையாளம் என்றே சொல்லலாம்.
மணிக்கூண்டு...
இது கோவையின் அடையாளம் என்றே சொல்லலாம்.
டவுன்ஹாலில் உள்ள இந்த மணிக்கூண்டின் கடிகாரம் 100 ஆண்டுகளுக்கு முன்பு லண்டனில் இருந்து கொண்டு வரப்பட்டது என்று கூறினால் ஆச்சரியமாக உள்ளது அல்லவா...!
பழுதான கடிகாரம்
அதுதான் உண்மையும் கூட...இந்த மணிக்கூண்டு பழமை மாறாமல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புனரமைக்கப்பட்டது. தொடர்ந்து மின்னொளியில் ஜொலித்தது. அதில் உள்ள கடிகாரமும் நன்றாக செயல்பட்டது. இந்த நிலையில் திடீரென்று அந்த கடிகாரம் இயங்காமல் போனது. இதனால் கடந்த ஓரிரு நாட்களாக அப்படியே நிற்கிறது. இதை அந்த வழியாக செல்பவர்கள் கண்டு ஏமாற்றம் அடைந்து செல்லும் நிலை உள்ளது.
5 மணி மட்டும்...
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
இந்த மணிக்கூண்டுதான் கோவையின் அடையாளமாக இருக்கிறது. அது சமீபத்தில் புனரமைக்கப்பட்டதால் மகிழ்ச்சியாக இருந்தது. தற்போது அதில் உள்ள கடிகாரம் இயங்கவில்லை. 5 மணியை மட்டும் காட்டிக்கொண்டே இருக்கிறது. இப்போதுதான் புனரமைக்கப்பட்ட நிலையில், மீண்டும் எப்படி பழுதானது என்பது தெரியவில்லை. எனவே பழுதை உடனடியாக சரி செய்து, மீண்டும் கடிகாரத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.