< Back
மாநில செய்திகள்
ஒருங்கிணைந்த பண்ணையை பார்வையிட்ட போது அமைச்சர் கே.என்.நேருவை கொட்டிய தேனீ
மாநில செய்திகள்

ஒருங்கிணைந்த பண்ணையை பார்வையிட்ட போது அமைச்சர் கே.என்.நேருவை கொட்டிய தேனீ

தினத்தந்தி
|
15 Sept 2022 12:49 AM IST

விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சியையும் நடத்த விடாமல் தேனீக்கள் இடையூறு செய்தன.

திருச்சி,

திருச்சி மாவட்டம் நவலூர் குட்டப்பட்டு கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பண்ணையை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியில் தேனீ வளர்ப்பு குறித்து அதிகாரிகளிடம் அமைச்சர் கே.என்.நேரு கேட்டறிந்தார்.

அப்போது தேனீ வளர்க்கும் பெட்டியில் இருந்த தேனீக்கள் அமைச்சர் கே.என்.நேருவையும், அவருக்குப் பின் சென்ற அதிகாரிகளையும் கொட்டின. பின்னர் அங்கு நடைபெற்ற விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சியையும் நடத்த விடாமல் தேனீக்கள் இடையூறு செய்தன. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்