திருவாரூர்
குறுகிய சாலையில் தடுப்புச்சுவர் கட்ட வேண்டும்
|வலங்கமான் அருகே ஆவூர் ஆரம்ப சுகாதார நிலைய குறுகிய சாலையில் தடுப்புச்சுவர் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வலங்கைமான்;
வலங்கமான் அருகே ஆவூர் ஆரம்ப சுகாதார நிலைய குறுகிய சாலையில் தடுப்புச்சுவர் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆரம்ப சுகாதார நிலையம்
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியத்தில் உள்ள ஆவூர் கிராமத்தில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்டது. இந்த சுகாதார நிலைய கட்டிடம் கட்டப்பட்ட இடத்துக்கு முன்பு ஒரு குளம் உள்ளது. இந்த குளக்கரையின் வழியாகத்தான் ஆஸ்பத்திரிக்கு செல்ல வேண்டும். தற்போது இந்த குளம் பாதுகாப்பற்ற நிலையில் குறுகிய வளைவு சாலையாக உள்ளது.
விபத்து ஏற்படும் அபாயம்
இதனால் இங்கு தடுப்புச் சுவர் இல்லை. எனவே ஆஸ்பத்திரிக்கு வந்து செல்லும் வயதான நோயாளிகள் கர்ப்பிணி பெண்கள் சிறுவர்கள் வாகன ஓட்டிகள் அனைவரும் சாதாரண நாட்கள் மட்டும் மழைக்காலங்களில் சிறிது கவன குறைவாக சென்றாலும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
தடுப்புச்சுவர்
இதைப்போல 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் விரைவாக வந்து செல்வதற்கு வசதி இல்லாமலும் தடுப்புச் சுவர் இல்லாததால் மிகுந்த அச்சத்துடனே வாகனங்கள் வந்து செல்கின்றன. எனவே நோயாளிகள் நலன் கருதி குளத்தின் கரைப்பகுதியில் தடுப்புச் சுவர் கட்டிநிழற்குடையுடன் கூடிய நடைபாதை அமைத்துக் கொடுத்தால் நோயாளிகள் இளைப்பாறுவதற்கும் வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக சென்று வருவதற்கும் வசதியாக இருக்கும். எனவே அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுத்து தடுப்புச்சுவர் கட்ட வேண்டும் என்று மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.