< Back
மாநில செய்திகள்
ஆம்புலன்சில் கர்ப்பிணிக்கு ஆண் குழந்தை பிறந்தது
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

ஆம்புலன்சில் கர்ப்பிணிக்கு ஆண் குழந்தை பிறந்தது

தினத்தந்தி
|
9 May 2023 12:23 AM IST

அன்னவாசல் அருகே ஆம்புலன்சில் கர்ப்பிணிக்கு ஆண் குழந்தை பிறந்தது.

அன்னவாசல் அருகே உள்ள குடுமியான்மலை உருவம்பட்டியை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மனைவி வெள்ளையம்மாள் (வயது 22). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவருைடய உறவினர்கள் அன்னவாசலில் உள்ள 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற 108 ஆம்புலன்ஸ், அங்கிருந்து வெள்ளையம்மாளை ஏற்றிக்கொண்டு பரம்பூர் அரசு மருத்துவமனையை நோக்கி சென்றது. ஆம்புலன்சை சுபாஸ் சந்திரபோஸ் ஓட்டினார். அப்போது வெள்ளையம்மாளுக்கு பிரசவ வலி மேலும் அதிகரித்தது. இதையடுத்து ஆம்புலன்சை டிரைவர் சாலையோரம் நிறுத்தினார். உடனே வெள்ளையம்மாளுக்கு ஆம்புலன்சில் இருந்த அவசர கால மருத்துவர் அருண்பாண்டியன் பிரசவம் பார்த்தார். இதில் வெள்ளையம்மாளுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இதைதொடர்ந்து தாயும், சேயும் பரம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு தாயும், சேயும் நலமாக உள்ளனர்.

மேலும் செய்திகள்