< Back
மாநில செய்திகள்
குன்றத்தூரில் கிணற்றில் தவறி விழுந்த 9-ம் வகுப்பு மாணவர் சாவு
காஞ்சிபுரம்
மாநில செய்திகள்

குன்றத்தூரில் கிணற்றில் தவறி விழுந்த 9-ம் வகுப்பு மாணவர் சாவு

தினத்தந்தி
|
22 Oct 2022 3:43 PM IST

குன்றத்தூரில் கிணற்றில் தவறி விழுந்த 9-ம் வகுப்பு மாணவர் பரிதாபமாக இறந்தார்.

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் அடுத்த மணஞ்சேரி பல்லாவரம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் பலராமன் (வயது 40). இவரது மகன் பொன்னரசு (15). இவர் குன்றத்தூரில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று முன்தினம் பள்ளி முடிந்து வீட்டுக்கு திரும்பி வராததால் பொன்னரசுவை தேடி உள்ளனர். எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் நேற்று குன்றத்தூர் அடுத்த மணஞ்சேரி பகுதியில் உள்ள கிணற்றின் அருகே பொன்னரசுவின் உடைகள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் பூந்தமல்லி தீயணைப்பு போலீசார் மற்றும் குன்றத்தூர் போலீசார் கிணற்றில் இறங்கி தேடி பார்த்த போது பொன்னரசுவை பிணமாக மீட்டனர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அவர் கிணற்றில் குளிக்கும் போது தவறி விழுந்து இறந்தாரா? நண்பர்கள் தள்ளி விட்டார்களா? என்ற கோணத்தில் குன்றத்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்