< Back
மாநில செய்திகள்
97 வயது மூதாட்டிக்கு எலும்பு முறிவு அறுவை சிகிச்சை
தென்காசி
மாநில செய்திகள்

97 வயது மூதாட்டிக்கு எலும்பு முறிவு அறுவை சிகிச்சை

தினத்தந்தி
|
9 Nov 2022 12:15 AM IST

தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் 97 வயது மூதாட்டிக்கு எலும்பு முறிவு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தது.

தென்காசி அருகே உள்ள வடகரையை சேர்ந்த சங்கிலிமாடன் என்பவருடைய மனைவி இசக்கியம்மாள் (வயது 97). இவர் தனது வீட்டில் நடந்து செல்லும்போது கால் தவறி கீழே விழுந்தார். இதில் அவரது வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் கடந்த 4-ந்தேதி தென்காசி மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு உடனடியாக எக்ஸ்ரே மற்றும் ஸ்கேன் எடுக்கப்பட்டு, அறுவை சிகிச்சை செய்வதற்கு எலும்பு முறிவு மருத்துவர்களால் முடிவெடுக்கப்பட்டது. அறுவை சிகிச்சை செய்வதற்காக மயக்க மருந்து கொடுக்க வேண்டிய பரிசோதனைகள் அனைத்தும் துரிதமாக செய்யப்பட்டு இருதய சிறப்பு சிகிச்சை மருத்துவர் மற்றும் மயக்க மருத்துவர்கள் குழு மூலம் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து 7-ம் தேதி இடுப்பு எலும்பிற்கு சிறிய துளை மூலம் கம்பி பொருத்தி அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடத்தப்பட்டது. அறுவை சிகிச்சைக்கு பின்னர் இசக்கியம்மாள் நலமுடன் இருக்கிறார். 97 வயதில் இந்த சிக்கலான எலும்பு முறிவு அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக நடத்திய மருத்துவர்கள் அனைவரையும் தென்காசி நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் பிரேமலதா, மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ஜெஸ்லின் ஆகியோர் வெகுவாக பாராட்டினார். மேலும் மாவட்ட கலெக்டர் ஆகாஷ் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தார்.

மேலும் செய்திகள்