< Back
மாநில செய்திகள்
உண்ணாவிரதம் இருக்க முயன்ற 96 வயது தியாகி
திருச்சி
மாநில செய்திகள்

உண்ணாவிரதம் இருக்க முயன்ற 96 வயது தியாகி

தினத்தந்தி
|
15 Aug 2023 9:41 PM GMT

96 வயது தியாகி உண்ணாவிரதம் இருக்க முயன்றார்.

மணப்பாறை:

மணப்பாறையை சேர்ந்தவர் சுந்தரம்(வயது 96). சுதந்திர போராட்ட தியாகி. இவர், தனது மகனுக்கு அரசு வேலை வழங்க வேண்டும். தனது சேதமடைந்த வீடு இடிந்து விட்ட நிலையில் புதிய வீடு கட்டித் தர வேண்டும் என்று சில ஆண்டுகளாக அதிகாரிகள், முதல்-அமைச்சர் உள்ளிட்டோரிடம் மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறி, நேற்று மணப்பாறையில் காமராஜர் சிலை முன்பு கோரிக்கைகள் அடங்கிய பதாகையுடன் உண்ணாவிரதம் இருக்க முயன்றார். இது பற்றி தகவல் அறிந்த மணப்பாறை போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று, அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அவரிடம் இது பற்றி அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி, அவரை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். சுதந்திர தினத்தன்று சுதந்திர போராட்ட தியாகி உண்ணாவிரதம் இருக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்