< Back
மாநில செய்திகள்
உலக நீதி தினத்தை முன்னிட்டு மாரத்தான் ஓட்டம்; 94 வயது முதியவர் பங்கேற்று அசத்தல்
மாநில செய்திகள்

உலக நீதி தினத்தை முன்னிட்டு மாரத்தான் ஓட்டம்; 94 வயது முதியவர் பங்கேற்று அசத்தல்

தினத்தந்தி
|
17 July 2022 9:21 PM IST

ஓசூர் அருகே நடைபெற்ற மாரத்தான் போட்டியில் 94 வயது முதியவர் பங்கேற்று அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

ஓசூர்:

ஓசூர் பாகலூர் சாலையில் உளியாளம் அருகே தனியார் லேஅவுட் பகுதியில், உலக நீதி தினத்தை முன்னிட்டு, தனியார் அமைப்புகளின் சார்பில், இன்று 21 கி.மீ மாரத்தன் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது.

இதில், பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்கள், முதியவர்கள் என அனைத்து தரப்பினரும் பங்கேற்றனர்.

இந்த போட்டியில், 94 வயதான தத்பாத்ரேயா என்ற முதியவரும் கலந்து கொண்டு சிறிது தூரம் ஓடி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். அவரை அனைவரும் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர். மேலும் அவருக்கு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்