திருவள்ளூர்
மொபட்டில் தனியாக சென்றபோது ஆசிரியையிடம் 7 பவுன் தங்க சங்கிலி பறிப்பு
|மொபட்டில் தனியாக சென்ற ஆசிரியை கழுத்தில் கடந்த 7 பவுன் தங்க நகையை 2 மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.
திருவள்ளூர்,
திருவள்ளூர் அடுத்த பூங்கா நகரை சேர்ந்தவர் விஜயலட்சுமி (வயது 42). இவர் பூண்டி அடுத்த வெள்ளாத்துக் கோட்டை பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் மாலை இவர் பள்ளியிலிருந்து வேலை முடிந்து தனது மொபட்டில் பூண்டி - திருவள்ளூர் வழியாக வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.
பூண்டி அடுத்த புதூர் பகுதியில் வரும்போது அவரை நோட்டமிட்ட மர்ம நபர்கள் 2 பேர் மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்தனர்.
அப்போது ஆசிரியை அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற அந்த நபர்கள் சற்றும் எதிர்பாராத நேரத்தில் விஜயலட்சுமி கழுத்தில் கிடந்த 7 பவுன் தங்க சங்கிலியை மர்ம நபர்கள் பறித்தனர். விஜயலட்சுமி சத்தம்போடவே மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
இதுகுறித்து விஜயலட்சுமி புல்லரம்பாக்கம் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து ஆசிரியையிடம் தங்க சங்கிலியை பறித்த நபரை தேடி வருகின்றனர். தனியாக சென்ற ஆசிரியையிடம் மர்ம நபர்கள் நகை பறிப்பில் ஈடுபட்ட சம்பவம் அந்த பதட்டத்தை ஏற்படுத்தியது.