பெரம்பலூர்
1,330 திருக்குறள்களுக்கு கதையுடன் 7 அடி உயர புத்தகம்
|1,330 திருக்குறள்களுக்கு கதையுடன் 7 அடி உயர புத்தகம் உருவாக்கப்பட்டுள்ளது.
உலக பொதுமறையாக விளங்கும் திருக்குறளுக்குபெருமை சேர்க்கும் வகையில் கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி மாதம் 15-ந்தேதி பெரம்பலூர் அகழ் கலை இலக்கியம் அமைப்பு சார்பில் திருக்குறளின் 133 அதிகாரங்களுக்கு, ஒரு அதிகாரத்துக்கு ஒரு எழுத்தாளர் என்ற முறையில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையிலான மொத்தம் 133 எழுத்தாளர்களை கொண்டு ஒரு குறளுக்கு ஒரு கதை என்று மொத்தம் 1,330 குறள்களுக்கு, 1,330 கதைகள் எழுதி உலக சாதனை படைக்கப்பட்டது. பின்னர் அவை கடந்த ஆண்டு ஜூலை 9-ந்தேதி 133 புத்தகங்களாக வெளியிடப்பட்டது. இந்நிலையில் திருக்குறளுக்கு பெருமை சேர்க்கும் நோக்கத்துடன் 133 எழுத்தாளர்களின் ஏற்பாட்டில் திருக்குறளில் 7 சீர்கள் இருப்பதை அடிப்படையாக கொண்டு 7 அடி உயர அளவில் உலக சாதனை புத்தகமாக உருவாக்கப்பட்டு, அதில் 1,330 குறள்களுக்கு எழுதப்பட்ட கதைகள் இடம் பெற செய்யப்பட்டுள்ளது. இந்த புத்தகத்தினை மதுரையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் வைக்க வேண்டும் என்று அந்த எழுத்தாளர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.