< Back
மாநில செய்திகள்
திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்த 60 வயது மூதாட்டி கொரோனாவால் உயிரிழப்பு!கோப்புப்படம் 
மாநில செய்திகள்

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்த 60 வயது மூதாட்டி கொரோனாவால் உயிரிழப்பு!

தினத்தந்தி
|
9 April 2023 11:48 AM IST

திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையத்தில் கொரோனா தொற்றால் 60 வயது மூதாட்டி உயிரிழந்தார்.

திருப்பூர்,

தமிழ்நாட்டில் கட்டுக்குள் இருந்த கொரோனா பரவல் தற்போது படிப்படியாக அதிகரித்து வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையத்தில் கொரோனா தொற்றால் 60 வயது மூதாட்டி உயிரிழந்தார். அவர் கடந்த 23-ல் பக்கவாத நோய்க்கு சிகிச்சை பெற கோவை அரசு மருத்துவமனையில் மூதாட்டி அனுமதிக்கப்பட்டிருந்தார்.

மருத்துவமனையில் மூதாட்டிக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. பக்கவாதம், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

மேலும் செய்திகள்