< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த 6 வயது சிறுமி உயிரிழப்பு - பெற்றோர் பரபரப்பு புகார்
|9 March 2024 10:20 PM IST
பள்ளியில் வழங்கப்பட்ட மாத்திரைகளை உட்கொண்டதாலேயே சிறுமி உயிரிழந்ததாக பெற்றோர் குற்றஞ்சாட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை,
கோவை வரதராஜபுரத்தைச் சேர்ந்த ராஜாமணி - புவேனேஸ்வரி தம்பதியின் 6 வயது மகள் தியா ஸ்ரீ. கடந்த 5-ந்தேதி திடீரென வயிற்று வலி ஏற்பட்ட நிலையில், சிறுமி அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிறுமிக்கு வயிற்றில் கட்டி இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி, திடீரென சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த நிலையில் பள்ளியில் வழங்கப்பட்ட மாத்திரைகளை உட்கொண்டதாலேயே சிறுமி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்ததாக கூறிய சிறுமியின் உறவினர்கள், அவர் பயின்ற மாநகராட்சி பள்ளிக்கு சென்று வாக்குவாததில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.