கன்னியாகுமரி
நாகர்கோவிலில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை பிளஸ்-1 மாணவர் கைது
|நாகர்கோவிலில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பிளஸ்-1 மாணவரை போலீசார் கைது செய்தனர்.
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பிளஸ்-1 மாணவரை போலீசார் கைது செய்தனர்.
சிறுமிக்கு பாலியல் தொல்லை
நாகர்கோவில் ஆசாரிபள்ளம் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கு 6 வயதில் மகள் இருக்கிறாள். அந்த இளம்பெண் நாகர்கோவிலில் உள்ள பலசரக்கு கடை ஒன்றில் வேலை செய்து வருகிறார்.
சம்பவத்தன்று காலை இளம்பெண் வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் சிறுமி மட்டும் தனியாக இருந்தாள். அந்த சமயம் அதே பகுதியை சேர்ந்த பிளஸ்-1 படிக்கும் 16 வயது மாணவர் சிறுமியின் வீட்டுக்கு சென்று விளையாடினார். அப்போது அவர், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்.
மாணவர் கைது
இதுபற்றி அந்த சிறுமி தனது தாயாரிடம் கூறி அழுதாள். அதைகேட்டு அதிர்ச்சியடைந்த இளம்பெண் நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் மாணவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். அதைத்தொடர்ந்து மாணவர் நெல்லை மாவட்டத்தில் உள்ள சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டார்.