< Back
மாநில செய்திகள்
தென்காசி மாவட்டத்தில் மர்ம காய்ச்சலுக்கு 6 வயது சிறுமி உயிரிழப்பு
மாநில செய்திகள்

தென்காசி மாவட்டத்தில் மர்ம காய்ச்சலுக்கு 6 வயது சிறுமி உயிரிழப்பு

தினத்தந்தி
|
12 Feb 2023 9:53 PM IST

தென்காசி மாவட்டம், ஆலங்குளத்தில் மர்ம காய்ச்சலுக்கு 6 வயது சிறுமி உயிரிழந்தார்.

தென்காசி,

தென்காசி மாவட்டம், ஆலங்குளத்தில் மர்ம காய்ச்சலுக்கு 6 வயது சிறுமி உயிரிழந்தார். சக்திவேல் என்பவரின் மகள் செண்பக மாலினிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு காய்ச்சல் வந்ததை அடுத்து, ஆலங்குளம் அரசு மருத்துவனையில் வெள்ளிக்கிழமை புறநோயாளியாக சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்.

நள்ளிரவு ஒரு மணிக்கு மேல் காய்ச்சல் அதிகமாக இருந்ததால் மீண்டும் ஆலங்குளம் அரசு மருத்துவமனைக்கு பெற்றோர் அழைத்துச் சென்றனர். ஆனால், வரும் வழியிலேயே சிறுமி இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்