< Back
மாநில செய்திகள்
பா.ஜனதாவுடன் பேச்சு நடத்த த.மா.கா.வில் 6 பேர் கொண்ட குழு

கோப்புப்படம் 

மாநில செய்திகள்

பா.ஜனதாவுடன் பேச்சு நடத்த த.மா.கா.வில் 6 பேர் கொண்ட குழு

தினத்தந்தி
|
7 March 2024 5:38 PM IST

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் த.மா.கா. களம் காண்கிறது.

சென்னை,

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் த.மா.கா. களம் காண்கிறது. எனவே நாடாளுமன்ற தொகுதிகள், எண்ணிக்கைகள் குறித்து பா.ஜனதாவுடன் பேச்சு நடத்த தேர்தல் தொகுதி பங்கீட்டு குழு அறிவிக்கப்படுகிறது.

6 பேர் கொண்ட தேர்தல் தொகுதி பங்கீட்டு குழுவில், முன்னாள் எம்.பி.யான பி.ஆர்.எஸ்.வெங்கடேசன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் விடியல் சேகர், என்.ஆர்.ரெங்கராஜன், கே.வி.ஆர்.ராம்பிரபு, பொதுச்செயலாளர்கள் ஏ.எஸ்.சக்திவடிவேல், ஏ.எஸ்.முனவர் பாஷா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்