மயிலாடுதுறை
6 அடி நீள நல்லபாம்பு பிடிபட்டது
|சீர்காழி அருகே 6 அடி நீள நல்லபாம்பு பிடிபட்டது
சீர்காழி;
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே புதுப்பட்டினம் தர்காஸ் மெயின் ரோட்டை சேர்ந்தவர் ராஜா(வயது47). இவர் தனது வீட்டின் கொள்ளை புறத்தில் கோழி வளர்த்து வருகிறார். நேற்று இவரது வீட்டின் கொல்லைப்புறத்தில் இருந்து கோழிகள் வினோதமாக அதிக அளவு சத்தம் எழுப்பியது. இதனால் சந்தேகம் அடைந்த ராஜா வீட்டின் கொல்லைப்புறத்துக்கு சென்றார். அப்போது கொல்லைப்புறத்தில் சுமார் 6 அடி நீள நல்லப்பாம்பு படமெடுத்தபடி கோழி அருகே நின்றது. மேலும் பாம்பை கண்ட கோழிகள் அச்சத்தில் அபயக்குரல் எழுப்பின. இதனால் சீறிய பாம்பு அடைகாத்துக்கொண்டிருந்த கோழியின் முட்டைகளை விழுங்க முயன்றது. உடனே ராஜா இது குறித்து பாம்பு பிடிப்பதில் வல்லவரான பாண்டியனுக்கு தகவல் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து பாம்பு பிடி வீரர் பாண்டியன் சம்பவ இடத்துக்கு சென்று படமெடுத்து சீறிய 6 அடி நீள நல்லபாம்பை லாவகமாக பிடித்து அருகே உள்ள வனப்பகுதியில் பத்திரமாக விட்டார்.